பொது

அயல்நாட்டு காற்பந்தாட்டக்காரர்களின் குடியுரிமை சட்டப்பூர்வமானது

09/10/2025 05:27 PM

கோலாலம்பூர், அக்டோபர் 09 (பெர்னாமா) -- மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம்-மின் ஏழு காற்பந்தாட்டக்காரர்களின் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் வழி, 2018ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 23 விளையாட்டாளர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள வேளையில், தற்போதுள்ள ஏழு அயல்நாட்டு வீரர்களின் குடியுரிமை சட்டப்பூர்வமானது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஏழு அயல்நாட்டு காற்பந்தாட்டக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்சான் ஜொஹான் எழுப்பிய கேள்விக்கு சைஃபுடின் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)