உலகம்

இராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிப்பு; பலர் மரணம்

11/10/2025 05:16 PM

டென்னிசி, 11 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று, அமெரிக்காவில் இராணுவ வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தது 19 பேர் காணாமல் போயிருக்கின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவசர சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

டென்னிசி, ஹிக்மென் மாவட்டம், பக்ஸ்னொர்ட்டில் உள்ள Accurate Energetic Systems-க்கு சொந்தமான தொழிற்சாலை முழுவதும் எரிந்து சாம்பலாகியது மற்றும் மோசமாக சேதமடைந்த வாகனங்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இவ்வெடிப்புச் சம்பவத்தினால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அத்தொழிற்சாலையில், அமெரிக்க தற்காப்புத் துறை மற்றும் உள்நாட்டு தொழில்துறை சந்தைக்காக பல்வேறு வகையான உயர் ஆற்றல் கொண்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]