விளையாட்டு

உலகக் கிண்ண காற்பந்தாட்டத்திற்கான தகுதி சுற்றில் இந்தோனேசியா தோல்வி

12/10/2025 01:41 PM

ஜெட்டா, 12 அக்டோபர் (பெர்னாமா) -- உலக கிண்ண காற்பந்தாட்டத்திற்கு தகுதி பெறும் பயணத்தில் ஈராக் தொடர்ந்து பயணிக்கிறது.

நேற்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவுடன் மோதிய ஈராக் 1-0 என்ற கோலில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில், மென்செஸ்டர் யுனைடெட்டின் மத்திய திடல் ஆட்டக்காரரான சிடேன் இக்பால் அடித்த ஒரே கோல் ஈராக்கின் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் வழி, தகுதி சுற்று ஆட்டங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஈராக், வரும் செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவுடன் மோதவுள்ளது.

அவ்வாட்டத்தில் வெற்றி பெற்றால் ஈராக் உலக கிண்ண காற்பந்தாட்டத்திற்கு தேர்வாகும்.

இரு ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தோனேசியா உலக கிண்ண காற்பந்தாட்டத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]