பொது

கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

16/10/2025 05:13 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- அனைவருக்கும் பள்ளி பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு நாட்டின் கல்வித்துறையில் ஐந்து முக்கிய கூறுகளை உள்ளடக்கிய  மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

மனநல சுகாதாரம், தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தான பொருள்களை பள்ளிகளுக்கு கொண்டு வருவதை தடை செய்வது அவற்றில் அடங்கும் என்று கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

அதைத் தவிர்த்து சமூகம் மற்றும்  இனபெருக்க சுகாதார கல்வி , சிறார் பாதுகாப்பு கொள்கை, சி.பி.பி மற்றும் ஆசியர்களின் வழிக்காட்டுதல், ஆதரவும் அந்த முக்கிய கூறுகளாகும் என்று ஃபட்லினா சிடேக் மேலும் குறிப்பிட்டார். 

மலேசியா முழுவதும் உள்ள 10,243 பள்ளிகளிலும் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து மாநில கல்வித் துறைகளும் மாவட்ட கல்வி அலுவலகங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

''மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலையீடு மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவது ஆதரிக்கப்படும். கூடுதலாக, சுகாதார அமைச்சு மற்றும் தொடர்புடைய துறைகளில் வியூக கூட்டாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என்றார் அவர். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]