பொது

கெடாவில் தீபாவளி பட்டாசுகள் வெடித்து 22 பேர் காயம்

20/10/2025 01:08 PM

கூலிம், 20 அக்டோபர் (பெர்னாமா) -- கெடா, கூலிம் பாயா பெசாரில் பட்டாசுகளை வெடித்து ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்.

அதிகாலை மணி 12.45-க்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பட்டாசுகளை வெடிக்கக் கூடியிருந்த மக்களால், பாயா பெசார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைக் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள்  கண்டறிந்ததாகவும் கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Zulkifli Azizan கூறினார்.

சம்பவ இடத்தை சென்றடைந்த போது, பட்டாசுகளை வெடித்து ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் காயமடைந்தது கண்டறியப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட  ஒருவரின் நெற்றியில் ஐந்து சென்டிமீட்டருக்கு ஆழமான காயம் ஏற்பட்டது.

போக்குவரத்து மீண்டும் கட்டுக்குள் வந்ததாகவும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் வழி, பாதிக்கப்பட்டவர்கள் கூலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்னர் கூட்டம் கலைந்து சென்றதாகவும் சுல்கிஃப்லி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)