கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாலம்பூர் மாநாட்டு மையம் கே.எல்.சி.சி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டன.
மேலும், வரலாற்று சாதனையாக, 2025 ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலமையேற்றிருக்கும் மலேசியாவின் கீழ் திமோர்-லெஸ்தே ஆசியானின் 11-வது உறுப்பு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசியான் ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சிகளில் திமோர்-லெஸ்தேவின் உறுப்பியம் ஒரு சாதனை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
ஆசியான் உறுப்பு நாடுகளின் 9 தலைவர்களும் திமோர்-லெஸ்தே ஆசியான் உறுப்பினராக இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)