புத்ராஜெயா, 12 நவம்பர் (பெர்னாமா) -- அடைந்திருக்கும் வெற்றிகளால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம்.
மாறாக நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.
மலேசியா போன்ற சிறிய நாடு வளர்ச்சியடைந்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வேளையில், நிலைத்தன்மை, ஒற்றுமை மற்றும் நல்லாட்சி ஆகியவை, தொடர்ந்து முன்னேற்றம் அடைவதை உறுதி செய்ய பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அமைதியைப் பாதிக்கக்கூடிய அச்சுறுத்தல்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டும் வருவதல்ல.
மாறாக, உள்நாட்டிலே ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பொறாமை, பகைமை மனப்பான்மையினாலும் அமைதி பாதிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நல்ல விவகாரம் என்னவென்றால், அது சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான கவனத்தை ஈர்க்கிறது. நாம் உயிர்வாழ முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறது. வரலாற்றுத் தகவல்களின்படி, பின் நோக்கி பார்த்தால், அலட்சியம் மற்றும் விரக்தி போன்ற விஷயங்ககள் மனதில் வேரூன்றத் தொடங்கும்போது எந்த நாடும் நீண்டநாள் நிலைத்திருக்க முடியாது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
மலேசியா தற்போது அனுபவிக்கும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறிய பிரதமர் அது முதலீட்டாளர் நம்பிக்கைக்கும் மக்களின் சமூக நல்வாழ்விற்கும் அடித்தளமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)