சிரம்பான், 20 நவம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு சிரம்பான் நுசாரி பிஸ் செண்டாயனில் உள்ள உணவகம் ஒன்றில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
சுமார் 30 வயதான ஆடவரை உட்படுத்திய இச்சம்பவம் குறித்து நேற்றிரவு
மணி 11.23க்கு ஆடவர் ஒருவர் MERS999 அவசர அழைப்பு மூலம் தகவல் அளித்ததாகச் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஆசீபி அசஹார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை தொடங்கி சமூக ஊடகங்களில் இச்சம்பவம் தொடர்பிலான காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
சம்பவத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட அவ்வாடவர் அவ்வுணகத்தில் உணவு உட்கொண்டிருந்ததாகவும் திடீரென இரு கார்கள் அங்கு வந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)