பங்சார் , 23 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 16 வயது மற்றும் அதற்குக் குறைவான சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்தி சொந்தமாக சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பது தடைசெய்யப்படும்.
பாலியல் குற்றங்களை புரிபவர்களிடமிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது உட்பட, இணைய குற்றச் செயல்களைத் தடுப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற லெம்பா பந்தாய் இந்திய சமூகத்திற்கான இணைய மோசடி விழிப்புணர்வு கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றை தவிர, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் அமல்படுத்தி வரும் வயது வரம்பு அடிப்படையில், பொதுவான வயது வரம்பை அமல்படுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)