நைரோபி, நவம்பர் 25 (பெர்னாமா) -- கம்போடியா உடனான எல்லைப் பிரச்சனையில் மலேசியாவின் பங்களிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் நியாயமற்றவை என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்திருக்கின்றார்.
தம்மை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அனுடின் அவ்வாறு உறுதியளித்தாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
''பிரதமர் அனுதீன் இன்று காலை என்னை அழைத்து, என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் அது உண்மையல்ல என்று உறுதியளித்தார் ஏனென்றால் எங்கள் பங்கு அதற்கான வழியை ஏற்படுத்துவது மட்டும்தான். ஆனால் நான் நினைக்கிறேன் எனக்கு ஆச்சரியமில்லை. சில மலேசியக் குழுக்கள் நாங்கள் தோல்வியுற்றாலோ அல்லது விமர்சிக்கப்பட்டாலோ மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். எதற்காக? இந்தப் வட்டாரத்தில் அமைதியைப் பாதுகாக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மலேசியர்கள் இதை வரவேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,'' என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இப்பிரச்சனையில் நாட்டின் பங்கு தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும் மலேசியாவில் சில தரப்புகள் அரசாங்கத்தை விமர்சித்து பேசுவது ஆச்சரியமல்ல.
மாறாக ஏமாற்றமளிப்பதாகச் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
தாய்லாந்து - கம்போடியாவுக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட அரச தந்திர ரீதியிலான பதற்றத்தில் மலேசியா தலையிட்டதாகக் கூறப்படுவதை முன்னதாக மறுத்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)