அரசியல்

செனாலாங் வேட்பாளர் ஷாஃபியி அப்டால் வாக்களித்தார்

29/11/2025 11:30 AM

கோத்தா கினபாலு, 29 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலில் வாரிசான் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஷாஃபியி அப்டால் இன்று காலை மணி 8.45-க்கு தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.  

செனாலாங் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துப் போட்டியிடும் அவர், செம்போர்னா, பூபுல் (Bubul) தேசிய ஆரம்பப்பள்ளியில் வாக்களித்தார்.    

அத்தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவும் வேளையில் Mohd Shafie-ஐ எதிர்த்து சபா மக்கள் கூட்டணி, ஜி.ஆர்.எஸ்-ஐ பிரதிநிதித்து 66 வயதுடைய டத்தோ மருண்டா கே.கே. அம்போங், இம்பியான் சபா கட்சியைப் பிரதிநிதித்து 56 வயதுடைய முஹமட் லிபாய் @ சம்சு சுண்டாலு மற்றும் பெர்சத்து சாடா மலேசிய கட்சியைப் பிரதிநிதித்து அப்துல் மஜிட் அங்குலான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

--பெர்னாமா
    
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]