கோலாலம்பூர், டிசம்பர் 05 (பெர்னாமா) -- டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 2025 சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய மகளிர் பூப்பந்து இரட்டையரான பெர்லின் தான்-எம்.தினா களமிறங்கவுள்ளனர்.
முதல் முறையாக சீ விளையாட்டு போட்டியில்பெர்லின் தானுடன் ஜோடி சேரவுள்ளதால் இப்போட்டிக்ந்த் தாம் கவனம் செலுத்துவதாக எம்.தினா தெரிவித்தார்.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீ விளையாட்டு போட்டியில் இம்முறை தங்கம் வெல்ல எம்.தினா இலக்கு கொண்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசிய பூப்பந்து சங்கம் BAM குறிப்பிட்டுள்ளது.
உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பெர்லின் தான்-எம்.தினா தற்போது அடைவுநிலையைப் பதிவு செய்துள்ளனர்.
தாய்லாந்து பொது பூப்பந்து போட்டி ஜப்பான் மாஸ்டர்ஸ் மற்றும் ஆர்க்டிக் பொது பூப்பந்து போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்று இந்த ஜோடி 2025 பருவத்திற்கான சிறந்த அடைவுநிலையை பதிவு செய்துள்ளது.
பெர்லின்-எம்.தினாவுடன் இணைந்து நாட்டின் தியோ மேய் சிங்-கோ பேய் கீ ஜோடியும் மகளிர் பிரிவில் களமிறங்கவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)