பொது

2025ஆம் ஆண்டு மலேசியாவுக்கு ஒரு சவாலாக அமைந்தது

21/12/2025 01:17 PM

புத்ராஜெயா, டிசம்பர் 21 (பெர்னாமா) -- 2025 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு ஒரு பரபரப்பான மற்றும் சவாலான காலம் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வர்ணித்திருக்கிறார்.

குறிப்பாக ஆசியான் மாநாட்டிற்குத் தலைமையேற்ற மலேசியா வட்டார மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைத் திறம்பட வழிநடத்தி உலக அளவில் கவனம் ஈர்த்ததாக அவர் கூறினார். 

''என்னைப் பொருத்த வரை இது ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நிகழும். மேலும் திமோர்-லெஸ்டேவின் வருகைக்குப் பிறகு ஒவ்வொரு 11 வருடங்களுக்கு நிகழும். எனவே, மலேசியாவின் திறனைக் காண்பிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. மலேசியா ஓர் ஏற்பாட்டாளராகச் சிறப்பாகச் செயல்பட்டதை அனைத்து நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஒவ்வொரு பிரதிநிதிகளும் உற்சாகமாக உணர்ந்ததைக் கூறினர்'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு மலேசிய ஊடக மன்றம் நிறுவப்பட்டதும் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.

அதன் ஊடக மன்றத்தை நிறுவியது எளிதான ஒன்றல்ல என்பதால் ஊடகவியலாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

''எனவே, 2025ஆம் ஆண்டில் இது எனக்கு மிகவும் பெருமையான தருணங்களில் ஒன்றாகும். உண்மையில் முழு பதவிக்காலமும். இதை (சட்டம்) வரைவது எளிதல்ல, அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், நாம் அதைக் கொண்டு வர முடிந்தால் அது ஒரு நாகரிகத்தைக் கொண்டுவரும் அந்தக் கருத்துடன் பொருந்தக்கூடியதாகவும் அனைத்து ஊழியர்களுக்கும் நீதி வழங்கும் என்றும் நம்புகிறேன்'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)