அரசியல்

பெர்லிசின் புதிய மந்திரி புசாராக அபு பாக்கார் பதவியேற்பு

28/12/2025 06:04 PM

ஆராவ், 28 டிசம்பர் (பெர்னாமா) -- கோலா பெர்லிஸ் சட்டடமன்ற உறுப்பினரான அபு பக்கார் ஹம்சா பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பெர்லிஸ் ராஜா, துவான்கு சைட் சிராஜுடின் ஜமாலுல்லாயில் முன்னிலையில், இன்று மாலை மணி 4.04-க்கு பெர்லிசின் 12-வது மந்திரி புசாராக 57 வயதுடைய அபு பக்கார் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

பெர்லிஸ் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவரான அபு பக்கார் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் 1,254 பெரும்பான்மை வாக்குகளில் கோலா பெர்லிஸ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தில் அபு பக்கார், சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் உட்புற மேம்பாடிற்கான புதிய ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி Sanglang சட்டமன்ற உறுப்பினரான முஹமட் ஷுக்ரி ரம்லி மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியதை அடுத்து அபு பக்கார் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]