புத்ராஜெயா, 04 மார்ச் (பெர்னாமா) -- 1,110 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீடு முறைக்கேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் இடம் வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர், அமைச்சின் தலைமைச் செயலாளர் உட்பட மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து சில ஆவணங்களும் பெறப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
''தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சிடமிருந்து முக்கியமான ஆவணங்களைப் பெற்றுள்ளோம். இந்த விஷயத்தில் அமைச்சரவை ஆவணங்களின் சமர்ப்பிப்பையும் நாங்கள் பார்த்தோம். இதர சாட்சிகளையும் நாங்க அழைத்துள்ளோம்,'' என்றார் அவர்.
இதனிடையே தற்போது இங்கிலாந்தில் இருக்கு நபர் ஒருவரும், இவ்வழக்கு விசாரணையில் தேடப்படும் நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அசாம் பாக்கி கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]