கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) -- இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் தொடக்கத்தில், நாட்டின் நுழைவாயில்களில் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும், தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு செயல்முறை, MyNllSe-சின் பயன்பாடு அனைத்து பயனர்களுக்கும் கட்டாயமில்லை.
முகப்புகளில் அனைத்துலக கடப்பிதழின் பயன்பாடு, தானியங்கி நுழைவாயில்கள் மற்றும் உயிரியல் அடையாள முறையில் கண்டறிதல் போன்ற, பல்வேறு குடிநுழைவு அனுமதி நடைமுறைகளை அரசாங்கம் இன்னும் நிலைநிறுத்தி இருப்பதாக, உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
''மக்கள் மற்றும் பயணிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வுகள் இருப்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது. MyBorderPass பயன்பாட்டைப் பொறுத்தவரை, நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் நெரிசலைத் தவிர்க்க பி.ஓ.சி அணுகுமுறை, முன்னதாக ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருந்தது,'' என்றார் அவர்.
MyBorderPass செயல்முறைக்குப் பதிலாக, MyNllSe செயல்முறையை மாற்றுவது, ஒரு குறிப்பிட்ட தேதியில் கட்டாயமாக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் செனட்டர் ரோபர்ட் லாவ் ஹுஇ யூ இன்று மேலவையில் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் சம்சுல் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]