புத்ராஜெயா, 20 மார்ச் (பெர்னாமா) -- மலேசியாவில் நடைபெறவிருக்கும் 2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெல்வதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு புதிய அணுகுமுறை விவாதிக்கப்பட்டு வருகிறது.
சீ விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக வாகை சூட குறிப்பிட்ட தங்கப் பதக்க இலக்கை நிர்ணயிக்கும் பரிந்துரை, விளையாட்டாளர்களின் மன உறுதியையும் உற்சாகத்தையும் பாதிக்காத வகையில் முன்வைக்கப்பட வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.
''தற்போது இது இன்னும் கலந்துரையாடல் கட்டத்தில்தான் உள்ளது. அந்தத் திசையில் செல்வது குறித்து நாங்கள் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய சீ விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இது வேறுபட்டது. ஏனென்றால், போட்டியை நாம் நடத்தவில்லை. தற்போது போட்டியை நடத்தும் நாடாக இருப்பதால் சவால் பெரியது. நாங்கள் இனி முதல் மூன்று இடங்களை இலக்காகக் கொள்ளவில்லை, மாறாக நாம் போட்டியை நடத்தும் நாடு என்பதால் கட்டாயம் முதலிடத்தில் இருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் முஹமட் தௌஃபிக் அவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஒட்டுமொத்தமாக 200 பதக்கங்களுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]