கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- இந்த பண்டிகைக் காலம் முழுவதும் மே மாதம் வரையில், நாட்டின் உணவு விநியோகம் போதுமானதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் உள்ளது.
உணவு விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கையிருப்பு, விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலியை தமது அமைச்சு தினமும் கண்காணித்து வருவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
சந்தையில் உணவு எப்போதும் கிடைக்கவும், அதற்கான அனுகலை மக்கள் பெறுவதை உறுதி செய்யவும், தேவையான எவ்வித தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் முஹமட் சாபு கூறினார்.
மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், வதந்திகளால் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதோடு, தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்குவதோடு, விவேகத்துடன் செலவு செய்து, விரயத்தைத் தவிர்த்து, உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கும்படியும் முஹமட் சாபு வலியுறுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]