விளையாட்டு

மயாமி டென்னிஸ் கிண்ணத்தை வென்ற சபலென்கா

29/03/2026 05:29 PM

மயாமி, 29 மார்ச் (பெர்னாமா) -- மயாமி பொது டென்னிஸ் போட்டியின் கிண்ணத்தை நடப்பு வெற்றியாளர் அரினா சபலென்கா தட்டிச் சென்றார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், அவர் உபசரணை நாட்டின் கோகோ காஃப்வுடன் மோதினார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா இம்முறையும் கிண்ணத்தை வெல்வார் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அதைப் போலவே, முதல் ஆட்டத்தில் 6-2 என்ற புள்ளிகளில் சபலென்கா வெற்றி பெற்றார்.

இருப்பினும் இரண்டாம் செட்டில் 4-6 என்ற புள்ளிகளில் சபலென்கா,  கோகோ காஃப்விடம் தோல்வி கண்டார்.

மூன்றாம் செட்டில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற நிலையில் Sabalenka தமது வெற்றியை உறுதி செய்தார்.

இதன் வழி, இந்தியன் வெல்ஸ் மற்றும் மயாமி வெற்றிப் பட்டங்களை அடுத்தடுத்து வென்ற ஐந்தாவது வீராங்கனையாக சபலென்கா சாதனை படைத்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)