விளையாட்டு

சாலாவை ஒப்பந்தம் செய்ய இரண்டு கிளப்கள் காத்திருப்பு

10/09/2024 07:15 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  லிவர்பூல் கிளப்பின் முன்னணி நட்சத்திரம் முஹமட் சாலாவின் ஒப்பந்தம் இந்த பருவத்தின் இறுதியில் முடிவடையவிருக்கும் வேளையில் ஐரோப்பாவின் மிகப் பெரிய இரண்டு கிளப்புகள் அவரை ஒப்பந்த செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், 3-0 என்ற கோல்களில் மென்செஸ்டர் யுனைடெட்டை லிவர்பூல் தோற்கடித்த ஆட்டத்தில் சாலா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இதுவே அக்கிளப்பில் தமக்குக் கடைசி பருவம் என்று கூறியிருந்தார்.

2017-ஆம் ஆண்டு ஏ.எஸ். ரோமாவில் இருந்து லிவர்பூல் கிளப்பில் இணைந்த அவர் பிரீமியர் லீக், வெற்றியாளர் லீக் என்று அங்குப் பல கிண்ணங்களை வென்றுள்ளார்.

அதோடு, 352 போட்டிகளில் பங்கேற்று 214 கோல்களையும் அடித்துள்ளார்.

இந்நிலையில், லிவர்பூலில், சாலாவின் ஒப்பந்தம் 2025 ஜூன் மாத இறுதியில் முடிவடைகிறது.

அதன் பிறகு, சவூதி அரேபியா பக்கம் அவர் செல்வார் என்று கணிப்புகள் கூறுகின்றன.

அதேவேளையில், 32 வயதான சாலாவை பேரிஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் யுவென்டஸ் ஆகிய கிளப்கள் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், அவரை ஐரோப்பாவிலேயே தற்காக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)