பொது

பொருளாதாரத்தை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் வெற்றி குறித்த உள்ளடக்கங்களைத் தயாரிப்பீர்

20/09/2024 05:53 PM

புத்ராஜெயா, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்திருக்கும் வெற்றிகள் குறித்த செய்திகளையும் தகவல்களையும் தயாரிப்பதில் பெர்னாமா உட்பட அனைத்து ஊடக நிறுவனங்களும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

மடானி பொருளாதார கட்டமைப்பு, புதிய தொழில்துறை பிரதானத் திட்டம், என்.ஐ.எம்.பி மற்றும் தேசிய ஆற்றல் மாற்ற இலக்கு திட்டம், என்.ஈ.டி.ஆர் உள்ளிட்ட சில முக்கிய கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக இவ்வெற்றி சாத்தியமானதை ஃபஹ்மி கோடிக்காட்டினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், மலேசியா நாட்டின் பொருளாதார நிலையில் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டதாக ஃபஹ்மி கூறினார்.

அதோடு, நாட்டின் பொருளாதாரம் குறித்த உலகின் பார்வையை மடானி அரசாங்கம் குறுகிய காலத்தில் மாற்றியமைத்திருப்பது ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்ததன் வழி நிரூபனமானதாகவும் ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

''நமது அலைவரிசைகளின் வழி இந்தத் தகவல் பகிரப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எதற்கு முயற்சி செய்யப்பட்டதோ அதற்கான பலன் தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது என்பது குறித்த உள்ளடக்கங்களைத் தயாரிக்கும்படி நான் ஆர்.டி.எம், பெர்னாமா ஜேகோம், ஜப்பென்-ஐ கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நாம் இருக்கக்கூடாது. நான் மீண்டும் சொல்கிறேன், அடைந்திருக்கும் வெற்றியுடன் திருப்தி அடைந்து முயற்சியை நிறுத்திவிடாமல் அதனைத் தொடர வேண்டும். சவால்கள் அதிகம்,'' என்றார் அவர். 

நாட்டின் நாணய மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்றிருக்கும் வேளையில் வர்த்தக மதிப்பும் ஒவ்வோர் காலாண்டிற்கும் அதிகரித்து வருவதுடன் முதலீடுகளும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருப்பதை ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]