பொது

அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிக்கும் இடையிலான விவாதக் கதவு எப்போதும் திறந்திருக்கும்

20/09/2024 06:02 PM

புத்ராஜெயா, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிக்கும் இடையிலான விவாதக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மீண்டும் வலியுறுத்தினார்.

இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியாக இணக்கம் காணப்பட்ட அரசாங்கத்தின் அம்முயற்சியை எதிர்கட்சி தரப்பினர் வரவேற்காதது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

''நமது அழைப்பு நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. சட்டை தயாரிக்க துணிகளை அனுப்பினோம், பதில் இல்லை. நாம் கதவைத் திறந்து வைத்துள்ளோம். ஜனநாயகம் மற்றும் மக்களுக்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். ஆனால் நட்பு அல்ல, புரிதல் என்ற உணர்வில் நீட்டப்பட்ட கரம் வரவேற்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட தரப்பாக நாம் இருப்பது போல் தெரிகிறது," என்றார் அவர். 

எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிப்பதை உறுதி செய்யவதோடு பயனற்ற அரசியல் விளையாட்டுகளை தவிர்க்கவே இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ஃபஹ்மி விவரித்தார்.

2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி உடன்பாட்டை எட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]