பொது

வெள்ளப் பகுதிகளில் உணவு பொருட்கள் போதுமான அளவில் உள்ளன

20/09/2024 06:26 PM

கோலா திரெங்கானு, 20 செப்டம்பர் (பெர்னாமா) -- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களின் விநியோகம் போதுமான அளவில் இருப்பதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் உத்தரவாதம் அளித்துள்ளது.

பேரிடர் காலக்கட்டத்தின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை மொத்த விற்பனையாளர்கள், D-D-W மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் D-D-R, கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விநியோக கையிருப்பின் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைக் காட்டிலும் 30 விழுக்காடு அதிகமாக சேகரிக்க அனுமதிக்கப்படுவதாக கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

இன்று, கோலா திரெங்கானுவில் 2024 திரங்கானு மாநில மெகா மடானி ரஹ்மா விறபனைத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அர்மிசான் அதனைக் கூறினார்.

அனைத்து மாநில கே.பி.டி.என் மற்றும் கிளைகளும் தற்போதைய வானிலை குறித்து விழிப்புடன் இருப்பதோடு மாநில மற்றும் மாவட்ட அளவில் வெள்ள நிர்வகிப்பு செயற்குழுக்களுடன் ஒத்துழைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]