பொது

16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே சபா, சரவாக்கில் தொகுதி அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படும்

10/11/2024 04:58 PM

கூச்சிங், 10 நவம்பர் (பெர்னாமா) -- 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே, சபாவிலும் சரவாக்கிலும் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மக்களவையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக அதன் தொடர்பான சில சட்ட அம்சங்களை ஆராய வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

''எங்களால் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதுவரை காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், நாங்கள் அவர்களுக்கு (சட்டத்துறை, சபா மற்றும் சரவாக் மாநில சட்டத்துறை) கால அவகாசம் வழங்கியுள்ளோம். கூட்டரசு, சபா மற்றும் சரவாக் ஆகிய மூன்று சட்ட ஆலோசகரிடமிருந்து அறிக்கையைப் பெற அடுத்த ஆண்டின் முதலாம் காலாண்டில் தொழில்நுட்ப குழுக் கூட்டத்தை நாங்கள் நடத்தவுள்ளோம்,'' என்றார் அவர்.

இன்று, கூச்சிங், கம்போங் செமாரியாங் பத்து பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஃபடில்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

சம்பந்தப்பட்ட அவ்விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையம் சரவாக் மாநிலத்தில் மட்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)