பொது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; பாதிக்கப்பட்ட தொழிற்சாலை, தொழிலாளர்களின் தகவலைப் பெற வலியுறுத்து

09/04/2025 07:33 PM

புத்ராஜெயா, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனம், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் முழு தகவலைப் பெறுமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சையும் மனிதவள அமைச்சையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேல் நடவடிக்கைக்காக அவ்விரு அமைச்சுக்களும் சம்பந்தப்பட்ட தகவல்களை ஆராயவிருப்பதாக தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்க பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''இவ்விவகாரம் குறித்து கலந்துரையாட எரிவாயு ஆணையம் மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது. அதோடு, இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிற்சாலை, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் முழு ட்டியலையும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சிடமிருந்து பெறுமாறு பிரதமர் மனிதவள அமைச்சை கேட்டுக் கொண்டுள்ளார்,'' என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள பிரதமர் அத்தகவல்களைக் கோரியுள்ளதை ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)