அரசியல்

ஆயர் கூனிங் இடைத் தேர்தல்; தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட தே.மு

20/04/2025 04:27 PM

தெமொ, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பாகிர் ஏழு அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியை இன்று அறிமுகப்படுத்தினார்.

அப்பகுதிக்கான வளமான பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் அதில் அடங்கும்.

''இளைஞர்களுக்கான திட்டமும் டிவெட்டும், நவீன விவசாயம், வாகன தொழில்துறை, இலக்கவியல் ஆகியவற்றில் டிவெட் பயிற்சிக்கு ஆதரவையும் அது வழங்குகிறது. தாப்பா, கம்பார் மற்றும் சிலிம் ரீவரில் தொழில்துறையுடன் இணைந்து, வேலைகளை பொருத்தும் முயற்சிகளை உருவாக்குதல்,'' என்று டாக்டர் முஹமட் கூறினார்.

இன்று, தெமொவில் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)