புத்ராஜெயா, 09 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு கெஅடிலான் கட்சித் தேர்தலில், தலைவர் பதவியைத் தற்காத்துப் போட்டியிடப்போவதைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அதற்கான படிவத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், கூடிய விரைவில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
''நான் இன்னும் பதிவு செய்யவில்லை, தலைவர் (பதவி) இன்னும் காலியாக இருக்கிறது. நான் அதை (படிவம்) பின்னர் நிரப்புகிறேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு உட்கொண்ட பின்னர், அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
2025-ஆம் ஆண்டு கெஅடிலான் தேர்தலின் வேட்புமனு தாக்கல் செயல்முறை மே 8-ஆம் தேதி நள்ளிரவு மணி 12 தொடங்கி மே 9-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை இரண்டு நாள்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு தேர்தல் போலவே, அன்வார் வகிக்கும் கெஅடிலான் தலைவர் பதவிக்குப் போட்டியிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)