பொது

இந்தியா & பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள் தூதரகங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்து

10/05/2025 04:39 PM

சிரம்பான், 10 மே (பெர்னாமா) -- இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள், அந்நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு, முழுமையான தகவல்களை வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மலேசியர்கள் கவனமாக இருக்கவும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

''அங்குள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் காஷ்மீரில் உள்ள ஆபத்தான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அங்குச் செல்லும் பயணங்களையும் ரத்து செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுவரை, எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை,'' என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை, சிரம்பானில் உள்ள செனாவாங் 3 தேசிய பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பான அண்மைய நிலவரங்களை விஸ்மா புத்ரா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக முஹமாட் ஹசான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)