பினாங்கு, 10 மே (பெர்னாமா) -- பினாங்கு, மெடான் செலெரா பாசார் லெபொ கெசிலில், பூனை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட காணொளி நேற்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இரு புகார்கள் செய்யப்பட்டிருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
வியாழக்கிழமை காலை, மணி எட்டு அளவில், உணவு வியாபாரி ஒருவர் பூனை ஒன்றின் கழுத்தை நெரிப்பதைக் கண்டதாக, அதே நாளில், 20 வயதான பெண் ஒருவர் செய்த முதல் புகாரை தமது தரப்பு பெற்றதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அப்துல் ரொசாக் முஹமாட் தெரிவித்தார்.
அப்புகாரைத் தொடர்ந்து, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, அந்த வளாகத்தில் உணவு வியாபாரம் செய்யும் 55 வயதான உள்நாட்டு ஆடவர், நேற்று, போலீஸ் புகார் செய்துள்ளார்.
போலீசார் முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டதோடு, இவ்வழக்கு பிற நிறுவனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது என்று வகைப்படுத்தி, தொடர் நடவடிக்கைக்காக பினாங்கு மாகராண்மைக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)