இந்தியா, 13 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியா, புது டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலை அந்நாடு திட்டமிட்ட பயங்கரவாத சம்பவமாக வகைப்படுத்தியுள்ளது.
அச்சம்பவத்திற்கு காரணமான தரப்பினருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இந்திய அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை புதுடெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பரபரப்பான மாலை நேரத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியது.
அந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
அக்காரை ஓட்டி வந்த நபர் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான டாக்டர் முஹமாட் உமர் நபி என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இச்சம்பவத்திற்கும் காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களுடன் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஏழுவர் கைது செய்யப்பட்டதற்கும் இடையே தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)