உலகம்

புதுடெல்லியில் மோசம் அடைந்திருக்கும் காற்று தூய்மைக்கேடு

13/11/2025 07:06 PM

புதுடெல்லி, 13 நவம்பர் (பெர்னாமா) -- புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 423ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அந்நகரில் வசிக்கும் மக்களுக்குப் பேராபத்தைக் கொண்டு வரும் என்று அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.

கடந்த பல நாள்களாகப் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுவாசக் கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் மாசு அளவைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)