புது டெல்லி, டிசம்பர் 17 (பெர்னாமா) -- புது டெல்லியில் காற்றுத்தூய்மைக்கேடு மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் சுவாச அல்லது இதய நோய்கள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த புகைமூட்டத்தினால் தெரிவுநிலை குறைந்துள்ளதால் எதையும் காண முடியாமல் தங்கள் சுற்றுப்பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுற்றுப் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து அதன் குறியீடு 450கும் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகப் பல கண்காணிப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் காட்டுகின்றன.
இது சனிக்கிழமை 430ஆக பதிவாகி குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவு காட்டுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)