பொது

புத்ராஜெயாவில் 3 நாள்களுக்கு நடைபெறும் மடானி நிகழ்ச்சிகள்

04/12/2025 05:32 PM

சைபர்ஜெயா, டிசம்பர் 04 (பெர்னாமா) --  நாளை தொடங்கி புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கும் 2025 பொதுச் சேவை சீர்திருத்தத்திற்கான தேசிய மாநாடு மற்றும் Rancakkan MADANI Bersama Malaysiaku ஆகிய நிகழ்ச்சிகளில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிகளில் 5,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கத் தலைமை செயலளார் டான் ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.

''குடும்பமாகக் காலை உணவை விரும்புவோருக்கு, புத்ராஜெயா சதுக்கத்தில் ஒரு குடும்ப சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளோம். செல்லப்பிராணிகளுக்கு உணவை நாங்கள் வழங்குகிறோம். வெளிப்புற நடவடிக்கைகளை விரும்புவோருக்கு, ஃப்ரீம் அருகே ஸ்கைவாக்கில் சவாரி செய்வதற்கான டிக்கெட்டுகளை நாங்கள் வழங்குகிறோம். இன்னும் பல உள்ளன. மிக முக்கியமாக, நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், 5,000 காலியிடங்கள் உள்ளன." என்றார் டான் ஶ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் 

டத்தோ ஸ்ரீ சிட்டி நூர்ஹலிசா தாருடின் மற்றும் ஃபைசல் தாஹிர் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)