சிட்னி, 16 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, ஆஸ்திரேலியா, போண்டி கடற்கரையில் யூதர்களின் தீபத் திருநாளை கொண்டாடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், இன்று முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
15 கொலை குற்றச்சாட்டுகள், கொலை நோக்கத்துடன் காயப்படுத்தியதாக 40 குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் என, 24 வயதான நவீட் அக்ராம் மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் தந்தையான 50 வயதான சஜிட்டுடன் இணைந்து அக்ராம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிட்னியின் தென்மேற்கே உள்ள பாதுகாப்பு நிறைந்த சிறையான கோல்பர்ன் சீர்த்திருத்த மையத்திலிருந்து காணொளி அழைப்பின் மூலம் அக்ராம் ஆஜரானார்.
அவர் அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]