கோத்தா பாரு, 04 மே (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி, பாசிர் மாஸ், கம்போங் ரெசாக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை ஒன்றில் ஐந்து லட்சத்து 85-ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 18 கிலோகிராம் எடைக்கொண்ட METHAMPHETAMINE வகை போதைப் பொருளை கிளந்தான் மாநில அரச மலேசிய சுங்கத் துறை, ஜே.கே.டி.எம் கைப்பற்றியது.
காலை மணி 7.18-க்கு, கோத்தா பாருவின் அமலாக்கப் பிரிவு அந்த அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக, கிளந்தான் ஜே.கே.டி.எம் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் கைவிடப்பட்ட புரோட்டோன் ஈஸ்வரா ரகக் காரை சோதனை செய்ததில், கிரிஸ்டல் கற்களைப் போன்ற வெள்ளைப் பொடி 17 பொட்டலங்களாக மூட்டை ஒன்றில் வைக்கப்பட்டிருந்து என்று அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]