பெட்டாலிங் ஜெயா, 07 அக்டோபர் (பெர்னாமா) -- உலகத் தலைவர்களின் வருகை மற்றும் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான ஏற்பாடுகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து விளக்கமளிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வருகை பற்றிய தகவல்களையும் தாம் வழங்கியதாக அன்வார் கூறினார்.
உலகத் தலைவர்களின் வருகைகள், அக்டோபர் மாத இறுதியில் ஆசியான் உச்சநிலை மாநாடு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வருகை, டிரம்ப் முன்வைத்திருக்கும் காசா அமைதித் திட்டம் குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்றும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட தயார்நிலை உள்ளிட்ட பல அண்மைய நிலவரங்கள் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் இடம்பெற்றன என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு பின்னர், அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, மாமன்னரை சந்திக்க பிரதமர் இஸ்தானா நெகாரா சென்றதால் மக்களவையின் அமைச்சர்கள் கேள்வி நேரம் இன்று ரத்து செய்யப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)