கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- பாகிஸ்தான் பிரதமர் முஹமட் ஷெபாஷ் சாரிஃப் மலேசியாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தமது நாட்டிற்கு புறப்பட்டார்.
அரச மலேசிய போலீஸ் படையின் முதல் படைப்பிரிவின் அணுவகுப்பு மற்றும் சிவப்பு கம்பள மரியாதையுடன், அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து காலை மணி 11.50-க்குப் புறப்பட்டார்.
ஷெபாஷ் சாரிஃப்யும் அவரின் பேராளர் குழுவையும் வழியனுப்ப பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கு வருகை புரிந்திருந்தார்.
வெற்றிகரமான இந்த மூன்று நாள்கள் பயணத்தை ஆவணப்படுத்தும் புகைப்பட ஆல்பத்தை அன்வார் அவருக்கு பரிசாக அளித்து கௌரவித்தார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்வார் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் ஒரு பரஸ்பர அடையாளமாக, அவரின் அழைப்பை ஏற்று, அவரின் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்தார்.
அவரின் வருகை இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளைப் பிரதிபலிக்கிறது.
அவ்விரு தலைவர்களும் திங்கட்கிழமை இருவழி சந்திப்பை நடத்தியபோது, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு, விமான போக்குவரத்து, பொது சுகாதாரம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இணக்கம் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)